ஈட்டி எறிதல்: சாதிப்பாரா நீரஜ் சோப்ரா

சோர்சோவ்: போலந்து தடகளத்தின் ஈட்டி எறிதலில் சாதிக்க காத்திருக்கிறார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
போலந்தில், சர்வதேச தடகள போட்டி இன்று நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஜெர்மனியின் ஜூலியன் வெபர், போலந்தின் மார்சின், கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் அசத்திய நீரஜ் சோப்ரா (90.23 மீ.,), முதன்முறையாக 90 மீ., துாரத்திற்கு மேல் எறிந்து சாதனை படைத்தார். இருப்பினும் இப்போட்டியில் நீரஜ், 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர், தனது கடைசி வாய்ப்பில் 91.06 மீ., எறிந்து முதலிடத்தை தட்டிச் சென்றார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இன்று எழுச்சி கண்டால், ஜெர்மனி வீரருக்கு பதிலடி கொடுத்து மீண்டும் 90 மீ., துாரத்திற்கு மேல் எறியலாம்.