இந்தாண்டுக்குள் கும்பாபிஷேகம் நடக்குமா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே வி.கோவில்பட்டி மருதப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் அறநிலையத்துறை சார்பில் 2 ஆண்டுகளாக மெதுவாக நடக்கின்றன. சட்டசபை கூட்டத்தில் ''இந்தாண்டு இறுதிக்குள் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்'' என்று உறுதியளிக்கப்பட்டது.

செல்லப்பாண்டி: திருப்பணிகள் மிகவும் மெதுவாக நடக்கிறது. குளத்துப் பணிகள் முழுவதுமாக முடிக்கவில்லை. உபயதாரர் மூலம் வழங்கிய கிரானைட் கற்களை கோயில் உட்பிரகாரத்தில் பதிக்க அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

கோயில் குள ஒப்பந்ததாரர் ஜெயராமன் கூறுகையில், ''ஒப்பந்தம் செய்த பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதிப்பணிகள் அறநிலையத்துறை நிதி ஒதுக்கினால்தால்தான் நிறைவடையும்'' என்றார்.

செயல் அலுவலர் இளமதி கூறியதாவது:

நிதிப் பற்றாக்குறையே மீதிப் பணிகள் முடிவடையாததற்கு காரணம்.உபயதாரர்கள் கிடைத்தால் மீதிப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார்.

Advertisement