பிரதமர் மோடிக்கு ராகுலின் 3 கேள்விகள்!

1

புதுடில்லி: பிரதமர் மோடியிடம் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 3 கேள்விகளை எழுப்பி உள்ளார்.


ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான நேரடி போரில் பாகிஸ்தானால் ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தானால் பெறமுடியாது.மோடியின் ரத்த நாளங்களில் ஓடுவது ரத்தம் அல்ல. கொதிக்கும் சிந்தூர் (குங்குமம்) தான் பாய்கிறது. மோடி இங்கே இருப்பதை பாகிஸ்தான் மறந்துவிட்டது. நான் நெஞ்சை நிமிர்த்தி, தலையை நிமித்து நின்று கொண்டிருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் என்றார்.

இது தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி அவர்களே, வெற்றுப் பேச்சுகளை நிறுத்துங்கள். எனக்கு பதில் சொல்லுங்கள்

1. பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தான் அறிக்கையை நீங்கள் நம்பியது ஏன்?

2. டிரம்ப்புக்கு பணிந்து இந்தியாவின் நலன்களை ஏன் தியாகம் செய்தீர்கள்?

3. கேமராக்களுக்கு முன்பு மட்டும் உங்கள் ரத்தம் கொதிப்பது ஏன்? இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

Advertisement