முழு உடல் பரிசோதனை முகாமுக்கு 2 பேர் சேர்ந்து வந்தால் 20 சதவீதம் சலுகை
கே.எம்.சி.எச்.,ல் முழு உடல் பரிசோதனை முகாம், கடந்த 2ம் தேதி துவங்கியது; வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. இம்முகாமில், இரண்டு பேர் சேர்ந்து வந்தால் அவர்களுக்கு பரிசோதனை கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை முழு உடல் பரிசோதனை மைய மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜோசப் கூறியதாவது:
பெரும்பாலானோருக்கு தங்கள் உடலில் ஏதாவது நோய் தாக்குதலுக்கான அறிகுறிகள் ஏதாவது உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால்தான் அதுகுறித்து தீவிரமாக தெரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். பரிசோதனைக்கு செல்கின்றனர். இவ்வாறான சூழலில் பதற்றம், தடுமாற்றத்தால் பரிதவிக்கும் நிலைக்கு செல்கின்றனர்.
இதை தவிர்க்க, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இவ்வாறு, முழு உடல் பரிசோதனை செய்வதன் வாயிலாக, ஏதாவது நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் அல்லது உரிய மருத்துவ ஆலோசனை பெற்று, உணவு உள்ளிட்ட பிற பழக்க வழக்கங்களில் மாறுதல் செய்து கொள்ளலாம்.
எந்த ஒரு நோயையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையான நிவாரணம் பெறலாம். உடல் வலி மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றையும் தவிர்க்கலாம். இதற்கு இந்த முழு உடல் பரிசோதனை பெரிதும் உதவுகிறது.
பல்வேறு நோய் அறிகுறி உள்ளோர், நோய் உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய விரும்புவோர், புகை, மது பழக்கம் உள்ளோர், சர்க்கரை ரத்த அழுத்த பாதிப்பு உள்ளோர் முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இப்பரிசோதனையை மேற்கொள்வது முக்கியம். இதன் வாயிலாக துவக்க நிலை மற்றும் முற்றிய நிலையில் உள்ள நோய்களை கண்டறிய முடியும்.
ரத்தம், சிறுநீர், மலம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், மேமோகிராம், ஆஞ்சியோகிராம், மார்பக எக்ஸ்ரே, காது, மூக்கு, தொண்டை, பல், கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் உள்ளன; பாதிப்பின் அறிகுறிகளுக்கேற்ப பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கே.எம்.சி.எச்.,ல், மே 2ல் துவங்கிய இம்முகாம், வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. முகாமுக்கு இரண்டு பேராக சேர்ந்து வரும் 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு பரிசோதனை கட்டணத்தில், 20 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, 87548 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
சிறுமி பலாத்கார வழக்கு; வாலிபருக்கு '20 ஆண்டு'
-
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்டில் 25ல் இறுதி முடிவு
-
உள்துறை அமைச்சருக்கு துணை முதல்வர் 'வக்காலத்து'
-
கணவர் மாயமான அதிர்ச்சி மனநிலை பாதித்த மனைவி
-
ராஜஸ்தான் அணியில் விளையாட வாய்ப்பு கிரிக்கெட் வீரரிடம் ரூ.24 லட்சம் அம்பேல்
-
குறிப்பிட்ட நேரத்தில் பூங்கா திறக்காத ஊழியர்கள் மீது புகார் அளிக்க வசதி