பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்டில் 25ல் இறுதி முடிவு

பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பின், அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் தொடர்பாக, அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. இது குறித்து வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்கு சபாநாயகர் காதர், முதல்வர் சித்தராமையா, எதிர்க்கட்சி தலைவர் அசோக், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும்.
கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிஷனின், ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக சில அமைச்சர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவில்லை. எனவே, இது தொடர்பான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு கெசட்டட் புரொபஷனர்கள் தேர்வு செயல்பாட்டில் நடந்ததாக கூறப்படும் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் கர்நாடக பொது சேவை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் எட்டு முன்னாள் உறுப்பினர்கள் மீதான வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற பெங்களூரு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் தலைவர் பரத்லால்மீனா, ஓய்வு பெற்ற பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராமமூர்த்தி, காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷன்உதவி பொறியாளர் அனில் குமார், உதவி செயல் பொறியாளர் மஹாதேவா ஆகியோர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்ட பரிந்துரையை, கைவிட முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வட கிழக்கு மாநிலங்களில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு; முகேஷ் அம்பானி அறிவிப்பு
-
அமலாக்கத்துறை ரெய்டு வந்தால் ஓடிப்போய் பிரதமரை சந்திக்கிறீர்கள்; சீமான் கிண்டல்
-
ஆன்லைன் சூதாட்ட விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
-
உலகில் பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; முதலீட்டாளர்கள் மாநாட்டில் மோடி பெருமிதம்!
-
அந்தமானில் ஏவுகணை சோதனை; விமானங்கள் பறக்க தடை விதிப்பு!
-
நடுவானில் தத்தளித்த இண்டிகோ விமானம் பத்திரமாக தரையிறங்கியது எப்படி? வெளியானது தகவல்