சார் - பதிவாளர் ஆபீஸ் கட்ட இடம் தயார்

வேளச்சேரி வேளச்சேரி சார் - பதிவாளர் அலுவலகம், 1994ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம், வேளச்சேரி, ஓரண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில், வாடகைக்கு செயல்பட்டு வந்தது. அங்கு இட வசதி இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன், ராஜலட்சுமி நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அலுவலகம் மாற்றப்பட்டது.

அங்கும் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. சொந்த கட்டடம் கட்ட பதிவுத்துறை தயாராக உள்ளது. ஆனால், இடம் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில், 175வது வார்டு, பெரியார் நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கிய 2,400 சதுர அடி பரப்பு இடத்தை, சார் - பதிவாளர் அலுவலகம் கட்டும் பணிக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான கோப்புகள், துறை வாயிலாக நடவடிக்கையில் உள்ளன. விரைவில், கட்டடம் கட்டும் பணி துவங்கும் என அதிகாரிகள் கூறினர்.

Advertisement