மீனாட்சியம்மன் கோவில் திருவிழா
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில் திருவிழா வரும், 25 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது.
கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில் திருவிழா, வரும், 25ம் தேதி, பந்தல்கால் நடும் நிகழ்வுடன் துவங்குகிறது. 27ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு ஆபரணப்பெட்டி எடுத்து வரப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு, சுவாமிக்கு பூஜை, அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடக்கிறது.
வரும், 28ம் தேதி, அதிகாலை 4:00 மணிக்கு, மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று, இரவு 7:00 மணிக்கு, கோவிலில் இருந்து சக்தி கும்பம் எடுத்துச் செல்லும் நிகழ்வு நடக்கிறது. 29ம் தேதி, காலை 10:30 மணிக்கு, மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி, காலை 10:30 மணிக்கு, விநாயகர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
மேலும்
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
-
யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்