உச்ச விலையை தொட்ட கொப்பரை கிலோ ரூ.197.40க்கு விற்பனை

உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் நடந்த கொப்பரை ஏலத்தில், அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.197.40க்கு விற்பனையானது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு, உடுமலை, தென்குமாரபாளையம், கப்ளாங்கரை, விளாமரத்துப்பட்டி, எலையமுத்துார், கணபதிபாளையம், சீலக்காம்பட்டி, மானுப்பட்டி, தளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 15 விவசாயிகள், 71 மூட்டை அளவுள்ள, 3,550 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இ-நாம் திட்டத்தின் கீழ், நேற்று நடந்த மறைமுக ஏலத்தில், 8 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.
முதல் தரம், ரூ.182 முதல், ரூ.197.40 வரையும், இரண்டாம் தரம், ரூ.121.10 முதல், 178 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது.திருப்பூர் விற்பனை குழு முதுநிலை செயலாளர் சண்முக சுந்தரம், ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், ''நேற்று நடந்த ஏலத்தில், தமிழகத்திலேயே முதல் முறையாக அதிகபட்ச விலையாக, கொப்பரை ஒரு கிலோ ரூ.197.40க்கு விற்பனையாகியுள்ளது. வரும் காலங்களில், கொப்பரை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது,'' என்றனர்.
மேலும்
-
பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்: உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
-
யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்