டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் பணி புரிந்த டி.எஸ்.பி., நந்தகுமார், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு டி.எஸ்.பி.,யாக பணி மாறுதலாகி சென்றார். இதையடுத்து வேலுார் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றப்பிரிவு டி.எஸ்.பியாக பணிபுரிந்த சரவணன் விக்கிரவாண்டி டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பொறுப்பேற்ற டி.எஸ்.பி.,க்கு சப் இன்ஸ்பெக்டர்கள் கந்தசாமி, சிவானந்தம், சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement