கடன் பிரச்னை: பெண் தற்கொலை

ஊட்டி : ஊட்டி அருகே, காத்தாடி மட்டம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ், இவரது மனைவி ஜெயா,44, மகள் திருமணத்திற்காக ஜெயா வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளார்.

சரிவர வேலை இல்லாததால், கடன் தவணையை முறையாக செலுத்த முடியவில்லை. விரக்தி அடைந்த ஜெயா கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊட்டி ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement