பாரததேவி ஆங்கில பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

திருபுவனை : மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளி நிர்வாகி இளமதியழகன் கூறுகையில், 'மதகடிப்பட்டில் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் எமது பள்ளி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஒழக்கத்துடன் கூறிய சிறந்த கல்வியை போதித்து வருகிறது.

கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொத்தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். மாணவி காயத்ரி 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். மாணவி அப்சரா 474 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவர் ஷரண்பிரசாத் 473 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.

450 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 400க்கு மேல் 13 பேரும், தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுகம் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்' என்றார்.

Advertisement