மளிகை கடையில் ரூ.8,000 திருட்டு

சேலம், ஆட்டையாம்பட்டி அருகே ராக்கிப்பட்டி, சேர்வாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி, 64. அதே பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை வந்தபோது, ஒரு பக்க ஷட்டர் திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்த போது

கல்லா பெட்டியில் இருந்த, 8,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. தங்கமணி புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement