ஜிம்பாப்வே அணிக்கு 'பாலோ-ஆன்'

நாட்டிங்காம்: நாட்டிங்கம் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 'பாலோ-ஆன்' பெற்றது.


இங்கிலாந்து சென்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரே ஒரு டெஸ்டில் (4 நாள் போட்டி) விளையாடுகிறது. டக்கெட் (140), கிராலே (124), போப் (169*) கைகொடுக்க, முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 498/3 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிவாங்கா பந்தில் போப் (171) அவுட்டானார். ஹாரி புரூக் (58) அரைசதம் கடந்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 565 ரன் எடுத்து, 'டிக்ளேர்' செய்தது.


பின் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணிக்கு கேப்டன் கிரெய்க் எர்வின் (42),சீன் வில்லியம்ஸ் (25) ஓரளவு கைகொடுத்தனர். அட்கின்சன் பந்தில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டிய பிரையன் பென்னட்(139), தனது 2வதுடெஸ்ட்சதத்தை பதிவு செய்தார்.
முதல் இன்னிங்சில்265 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆன ஜிம்பாப்வே அணிக்கு 'பாலோ-ஆன்' வழங்கப்பட்டது.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணிக்கு பென்னட் (1), கேப்டன் எர்வின் (2) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 30/2 ரன் எடுத்திருந்தது. பென் கர்ரான் (4), சீன் வில்லியம்ஸ் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement