ரூ.1.44 லட்சம் மோசடி ஆட்டோ டிரைவர் மீது வழக்கு

ஈரோடு, மூதாட்டியிடம், ரூ.1.44 லட்சம் மோசடி செய்த ஆட்டோ டிரைவர் மீது, சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சிவகிரி தாண்டாம்பாளையம், அம்பேத்கர் நகரை சேர்ந்த சடையப்பன் மனைவி பாப்பாள், 70; ஓய்வு பெற்ற துாய்மை தொழிலாளர். இவரது வங்கி கணக்கில் ஓய்வூதிய பணம், 1.76 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இவருக்கு தெரிந்தவர் என்ற முறையில், அரச்சலுார் ஜே.ஜே.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபால், 38, என்பவரை எடுத்து தரும்படி கேட்டுள்ளார். இதற்காக ஏ.டி.எம்., கார்டு பெற்றவர், பாப்பாளுக்கு தெரியாமல், 10,000 ரூபாய், 15,000 ரூபாய் என, 1.44 லட்சம் ரூபாய் வரை எடுத்துள்ளார். இதை தாமதமாக அறிந்த பாப்பாள், சிவகிரி போலீசில்
புகாரளித்தார்.
இதன் அடிப்படையில் கோபால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement