காவிரி ஆற்றில் குதித்து பெண் தற்கொலை



ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையத்தில், காவிரி ஆற்று பாலத்தின் மீதிருந்து மூதாட்டி ஒருவர் ஆற்றில் நேற்று குதித்து தற்கொலைக்கு முயன்றதாக நேரில் பார்த்த சிலர் அளித்த தகவலின்படி, கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் வெப்படை தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். மீனவர்கள் உதவியுடன், தீயணைப்பு வீரர்கள், பரிசலில் சென்று மூதாட்டி உடலை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், பெருந்துறை அருகே விஜயமங்கலம் தள்ளியம்புதுாரை சேர்ந்த விஜயா, 60, என்று தெரியவந்தது. கணவர் இறந்து விட்ட நிலையில், ஒரு மாதமாக உடல் நலக்குறைவால், பள்ளிபாளையத்தில் உள்ள மகள் மல்லிகா வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றுள்ளார். முன்னதாக பவானியில் சில வீடுகளில் வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று காலை 'தனக்கு உடல் நிலை சரியாகிவிட்டது, வேலைக்கு செல்கிறேன்' என்று மகளிடம் கூறிவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

Advertisement