கோவூர் கோவில் குளம் ரூ.5 கோடியில் சீரமைப்பு

குன்றத்துார், :குன்றத்துார் அருகே கோவூரில், 1.42 ஏக்கர் பரப்பளவில் விநாயகர் கோவில் குளம் உள்ளது. இந்த குளம், பராமரிப்பின்றி கழிவுகள் கலந்து துார்ந்தது. குளத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில், 4.98 கோடி ரூபாய் மதிப்பில், குளத்தை சீரமைக்க திடமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் அன்பரசன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று குளத்தை சீரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தனர். இதில், அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement