நாளை மாலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

9

புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அவருக்கு மாலை 4.10 மணியளவில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



நிடி ஆயோக் அமைப்பின் கூட்டம் நாளை(மே 24) டில்லியில் நடக்கிறது.இந்த கூட்டம் நிடி ஆயோக் அமைப்பின் தலைவர் பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது.


பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக்கில் கலந்து கொள்ள டில்லி சென்றுவிட்டார். அங்கு விமான நிலையத்தில் தி.மு.க., அமைச்சர்கள், தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை சந்தித்தார்.


நாளை நடக்க உள்ள நிடி ஆயோக் கூட்டத்தின் இடைவேளை நேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் ஒதுக்க கேட்கப்பட்டு இருந்தது. இந் நிலையில் நாளை (மே 24) மாலை 4.10 மணியளவில் பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது தமிழக நலன் சார்ந்த பல்வேறு விஷயங்களை அவரிடம் வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

Advertisement