2 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
பள்ளிப்பாளையம், காவிரி சுற்றுவட்டாரத்தில், நேற்று மதியம் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பள்ளிப்பாளையம் அருகே காவிரி, பிரேம்நகர், கரட்டாங்காடு, வசந்தநகர், முனியப்பன்நகர், மற்றும் இதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று மதியம், 12:00 மணி முதல் 2:30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. திடீரென அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்களும், விசைத்தறி தொழிலாளர்களும் மிகவும் அவதிப்பட்டனர்.
இது குறித்து மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'மின் ஒயரில் உரசியபடி இருந்த மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது. இப்பணி முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்பட்டது,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement