பெண் போலீசை அரிவாளால் வெட்டியவர் மீது குண்டாஸ்

தேனி:தேனி மாவட்டம் கம்பத்தில் பெண் போலீசை அரிவாளால் வெட்டிய குபேந்திரன் 55, என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தேனி மாவட்டம் கூடலுார் கே.கே.,நகர் பாண்டியராஜன் வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா, கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.


இவர்கள் வீட்டின் அருகில் வசிக்கும் குபேந்திரன் என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்தது. இவர் ஏப்.,23ல் கம்பம்ரோடு அரசமரம் அருகே பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அங்குவந்த குபேந்திரன் அரிவாளால் ஏட்டு அம்பிகாவை வெட்டினார். காயமடைந்த அவர் தேனி மருத்துவக்கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டார். கம்பம் தெற்கு போலீசார் குபேந்திரனை கைது செய்து மதுரை சிறையில் உள்ளார்.


இவர் மீது ஏற்கனவே ரேஷன்கடை பணியாளரை தாக்கியது, திருட்டு, கொலைமிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன . இதையடுத்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தமபாளையம் டி.எஸ்.பி., வெங்கடேசன், எஸ்.பி., சிவபிரசாத், கலெக்டருக்குரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் குபேரந்திரன் மீது குண்டாஸ் பாய்ந்தது. அதற்கான உத்தரவு மதுரை சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டது.

Advertisement