கற்கள் பெயர்ந்த சாலையால் பெருமாள்பட்டில் அவதி

பெருமாள்பட்டு:திருவள்ளூர் அடுத்துள்ளது பெருமாள்பட்டு. இங்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இங்குள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளன.

இதனால் குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆய்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement