ஜமாபந்தியில் சிக்கிய போலி வி.ஏ.ஓ., கைது

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, சிட்ரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர்.
இவர், நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், தன் நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய மனு எடுத்து வந்தார்.
அம்முகாமில், வருவாய் துறை அடையாள அட்டையை கழுத்தில் தொங்க விட்டிருந்த ஒரு நபர், சந்திரசேகரிடம் பேச்சு கொடுத்துள்ளார். தான் வி.ஏ.ஓ., எனவும், 4,000 ரூபாய் தந்தால் பட்டா மாற்றி தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய சந்திசேகர் 1,000 ரூபாயை தந்து விட்டு, மீதி பணம் பின் தருவதாக கூறியுள்ளார். எனினும், அந்நபரை அவருக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்துகொண்டார்.
நேற்று, பணம் வாங்கிய நபரை, தாலுகா அலுவலக வளாகத்தில் காண முடியாததால், சந்தேகமடைந்த சந்திரசேகர், மொபைல் போனில் எடுத்த புகைப்படத்தை அங்குள்ள அரசு அலுவலர்களிடம் காண்பித்து விசாரித்தார். அப்போது, அவர் போலி வி.ஏ.ஓ., என்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்திரசேகர், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே சந்திரசேகரிடம் மீதி தொகையை வாங்க, தாலுகா அலுவலகம் வந்த நபரை, போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர், பெரியபாளையம் அடுத்த வடமதுரை காலனியைச் சேர்ந்த செல்வின், 41, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
அரபிக் கடலில் உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை மையம் தகவல்
-
காசா மீது கொஞ்சம் கருணை காட்டுங்க; இஸ்ரேலிடம் வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்
-
ஹார்வர்டு பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை; அதிபர் டிரம்ப் உத்தரவு
-
வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் அரசு; பதவியை ராஜினாமா செய்ய யூனுஸ் முடிவு
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
இன்றைய மின்தடை