வக்கீலுக்கு கொலை மிரட்டல் 'மாஜி'யின் மகன் மீது வழக்கு

துாத்துக்குடி:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் இரண்டாவது மகன் ஜெபசிங், 41. இவருக்கும், சிலுவைப்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் பால்துரை என்பவருக்கும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்துள்ளது.

மே 20ம் தேதி இரவு, பால்துரையை மொபைல் போனில் தொடர்பு கொண்ட ஜெபசிங், தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அவரை ஆசிரியர் காலனிக்கு வரவழைத்து, தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் ஜெபசிங் உள்ளிட்டோர் தப்பியோடினர்.

துாத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பால்துரை புகார் அளித்தார். ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement