தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்: நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி,:நெல்லையப்பர் கோயில் வெள்ளி தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் வழங்கினார்.
அவர் கூறியதாவது: நெல்லையப்பர் கோயிலில் வெள்ளி தேருக்கு பக்தர்களால் 175 கிலோவுக்கு மேலாக வெள்ளி தரப்பட்டுள்ளது. நானும் ஒரு கிலோ வெள்ளி தந்துள்ளேன். நெல்லையப்பர் கோயிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக உத்தரகாண்ட் மாநில முதல்வரிடம் பேசப்பட்டுள்ளது.
ராமதாஸ், அன்புமணி ஒன்று சேர வேண்டும். பா.ஜ., கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். அன்புமணி,- ராமதாஸ் பிரச்னையின் பின்னணியில் பா.ஜ., இல்லை. பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம்.
தி.மு.க., கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.
2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலானவற்றை முதல்வர் நிறைவேற்றவில்லை.
சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 10 மாத காலத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால் வரவிருக்கும் வரும் நம் ஆட்சியில் நிறைவேற்றப்படும்.
ஸ்ரீவில்லிபுத்துாரில் கூறியதாவது: டாஸ்மாக் ஊழல் குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இறுதி தீர்ப்பு வந்த பின்னர் தான் கருத்து கூற முடியும்.
தி.மு.க., அரசு கல்வி நிதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது தேர்தலுக்காக மட்டுமே. ரெய்டு பயத்தை காட்டி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் பா.ஜ., வுக்கு இல்லை. முதல்வர் சொல்வதை எல்லாம் நம்ப முடியாது, என்றார்.
மேலும்
-
முத்தரையர் 150வது சதய விழா கொண்டாட்டம்
-
பயங்கரவாதத் தாக்குதல் தொடர்ந்தால் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை
-
கேரளாவில் தொடரும் கனமழை; 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
-
தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; பிரேமலதா குற்றச்சாட்டு
-
பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் கூட்டம்; டில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 சரிவு; இன்றைய நிலவரம் இதோ!