போடியில் பா.ஜ., ஊர்வலம்

போடி: இந்திய ராணுவத்தின் சிந்தூர் ஆப்பரேஷனை ஆதரித்தும், பிரதமர் மோடியை பாராட்டி போடியில் பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடந்தது.

பா.ஜ., நகரத் தலைவர் சித்ரா தேவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜ பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் வள்ளுவர் சிலை முன்பாக துவங்கி காமராஜ் பஜார் வழியாக வ.உ.சி., சிலை வரை சென்றனர். முன்னாள் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி, நகர பொதுச் செயலாளர் மணிகண்டன், சிவ குருநாதன், செல்வம், தலைவர் லதா, முன்னாள் ராணுவ வீரர்கள், ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு ஹிந்து இயக்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement