குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு: சோனியா, ராகுலை சந்தித்தது குறித்து முதல்வர் கருத்து

50

புதுடில்லி: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுலை சந்தித்து பேசினார். குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி தலைமையில் நாளை நிடி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி சென்றுள்ளார். நிடி ஆயோக் கூட்டத்திற்கு இடையே பிரதமர் மோடியை தனியே சந்தித்து பேச முதல்வர் அலுவலகம் நேரம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்நிலையில், ஸ்டாலின் டில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுலை சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியில் சோனியா, ராகுலை சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு சிறப்பான அரவணைப்பு இருக்கிறது. இது சாதாரண வருகை இல்லை. குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்டாலின் கூறியுள்ளார்.



நலம் விசாரிப்பு





பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பரமேஸ்வரனை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அரசு சார்பில் தேவையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.



பிறகு டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை ஆய்வு செய்தார். சில மாநில முதல்வர்களையும் தனித்தனியே சந்திக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement