யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்

பாட்னா: '' யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன். வறுமையை எப்படி ஒழிப்பேன் என்பதை மட்டும் மக்களிடம் சொல்வேன், '' என ஜன்சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பீஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை துவக்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பல மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் சாரன் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக பீஹார் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இதில் இரண்டு ஆண்டுகள் நடைபயணமாக செல்கிறேன். 5 ஆயிரம் கிராமங்களுக்கு சென்றுள்ளேன். நான் யாரிடமும் ஓட்டு கேட்பதில்லை. ஏன் தெரியுமா?
1- 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை யாரேனும் ஒருவர் வந்து உங்களிடம் வந்து ஓட்டு கேட்கின்றனர். உங்களை யார் சந்தித்தாலும் ஒட்டு மட்டும் கேட்கின்றனர். ஓட்டுப்போட்டால், உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதாக கூறுகின்றனர். இதனை கேட்டு, உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருக்கே ஓட்டுப் போடுகின்றீர்கள்.
40 -50ஆண்டுகள் காங்கிரசை வெற்றி பெற செய்தோம். பிறகு, லாலு பிரசாத் யாதவை தேர்வு செய்தோம். கடந்த 20 ஆண்டுகளாக நிதீஷ்குமாரை இருக்கையில் அமர வைத்து உள்ளோம். மத்தியில் பிரதமர் மோடியை வெற்றி பெற செய்துள்ளோம். ஆனால், உங்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தலைவர்கள் அனைவரும் இனிப்பாக மட்டும் பேசுகின்றனர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதிகள் குறித்து கவலைப்படுவது கிடையாது. தற்போது உங்கள் முன் நான் வந்துள்ளேன். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை கேட்ட பிறகு ஓட்டுப்போடுங்கள்.நாங்கள் வெற்றி பெற்ற பிறகு, வாக்குறுதியை நிறைவேற்றுவோம் என்பதற்கு என்ன உறுதி.
முந்தைய தலைவர்கள் அனைவரும் இனிப்பாக பேசி ஓட்டுகளை பெற்றனர். நன்றாக பேசியவர்களும் வெற்றி பெற்ற பிறகு உங்களைப் பற்றி கவலைப்படவில்லை. மற்றவர்கள் செய்ததை போல், பிரசாந்த் கிஷோரும் செய்யலாம். எனவே, நான் யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்.
வறுமையில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதை மட்டும் சொல்வேன். அதில் நீங்கள் கற்றுக் கொண்டு, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஓட்டுப் போடுங்கள். நாங்கள் சொல்லியபடி ஓட்டுப் போட்டால், உங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு நிச்சயம் சாத்தியம் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.






மேலும்
-
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: டில்லியில் வங்க தேசத்தினர் 121 பேர் கைது
-
நாளை மாலை பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!
-
பாக்.,கில் ராணுவ ஆட்சியாளர்களை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள்: ஜெய்சங்கர்
-
தமிழை உயிர்ப்புடன் வைத்திருங்கள்; சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம் அன்புக்கட்டளை
-
தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவரின் குடும்பத்தை சந்திக்கும் பிரதமர்