சிதம்பரம் ரயில் நிலைய பணி அதிகாரி விளக்கம்

கடலுார்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் முதற்கட்ட புனரமைப்பு பணிகள் முடிந்துள்ளன. 2ம் கட்டமாக முடிக்க வேண்டிய பணிகள் தான் நிலுவையில் உள்ளன என, திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகள் முடியாமலயே சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷன் திறப்பு விழா நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் விளக்கமளித்துள்ளார். அதில், சிதம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் முதற்கட்டமாக புதிய பிளாட்பாரம், மேற்கூரை, இருக்கைகள், எல்.இ.டி. விளக்குகள் வசதி, குடிநீர் வசதி, நடந்து செல்லும் மேம்பாலங்கள் புதுப்பித்தல், இணைப்பு சாலை, வாகன நிறுத்தம், நடைமேடை, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் சிஸ்டம் உள்ளிட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன.

2ம் கட்ட பணிகளாக புதிய தரை, டிஜிட்டல் அறிவிப்பு பலகை, இருக்கைகள், குடிநீர் டேப்புகள், எல்.இ.டி., கோச் போர்டுகளுக்கு மின்கேபிள் போடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement