தைலாபுரத்தில் பா.ம.க., மாஜி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கடந்த மே 11ம் தேதி மகாபலிபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாட்டிற்கு பிறகு, தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க., மாவட்ட செயலாளர்கள், வன்னியர் சங்க நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நடத்தினார். ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மனக்கசப்பு உள்ள நிலையில், இக்கூட்டங்களில் அன்புமணி பங்கேற்றவில்லை.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி நடந்த மாநில சமூக நீதி பேரவை நிர்வாகிகள் கூட்டத்தில், 'அன்புமணி மீதான மனக்கசப்பு நீங்கிவிட்டதாக ராமதாஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில், நேற்று திடீரென பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இதில், வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

நாளை (25ம் தேதி) சமூக முன்னேற்ற சங்க கூட்டம், 26 ம் தேதி பட்டாளி தொழிற்சங்க கூட்டம், திண்டிவனம் கே.ஆர்.எஸ். அம்மா மகாலில் நடைபெற உள்ளது.

Advertisement