'பீதி அடைய வேண்டாம்'
ஹரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி சிங் ராவ், கூறியதாவது:
மாநிலம் முழுதும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு மற்றும் மருத்துவமனைகளில் தயார் நிலை குறித்து கண்காணித்து வருகிறோம். மக்கள் பீதி அடையத் தேவையில்லை. குருகிராமில் இருவர் மற்றும் பரிதாபாத்தில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேருமே வெளிநாட்டு பயணம் எதுவும் செய்யவில்லை.
பாதிக்கப்பட்ட இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நான்கு பேருமே ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் ஆலோசனைகளை ஹரியானா அரசு பின்பற்றுகிறது. மக்கள் பொதுவெளியில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளித்து பணியாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.