கஞ்சா கடத்திய 3 பேர் கைது

நடுவீரப்பட்டு, : பண்ருட்டி அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் கொள்ளுக்காரன்குட்டை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கொள்ளுக்காரன்குட்டை-சத்திரம் செல்லும் சாலையில் உள்ள முந்திரிதோப்பில் சந்தேகத்தின்பேரில், பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், திருச்சி, காந்தி நகரைச் சேர்ந்த முத்துராமன்,48; துாத்துக்குடி முத்துராஜ் மகன் மணி,27; ஆகியோர் பைக்கில் கஞ்சா கடத்தி வந்து, புதுச்சத்திரம் ரவமணி மகன் ரவிகிருஷ்ணன் 24; என்பவரிடம் விற்பனை செய்ய வந்ததும் தெரிந்தது.

உடன், போலீசார், மூவரையும் கைது செய்து, 200 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement