மனநலம் பாதித்த இளைஞர் அடித்து கொலை? 

பொள்ளாச்சி : சோமனுாரை சேர்ந்த ரவிக்குமார்,52,இவரது மகன் வருண்காந்த்,22, மனநலம் பாதிக்கப்பட்டவர். இவரை, பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சேர்த்தார்.

கடந்த, 15ம் தேதி இந்த காப்பகத்தில் இருந்து, மாற்றுத்திறனாளி இளைஞர்களை ஆழியாறுக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். மாலையில் காப்பக நிர்வாகிகள், பெற்றோரை தொடர்பு கொண்டு, வருண்காந்த்தை காணவில்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, ரவிக்குமார் கொடுத்த புகாரின் பேரில், ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்துதேடி வந்தனர். விசாரணையில், கடந்த, 12ம் தேதி காப்பகத்தில் அந்த இளைஞரை அடித்து கொலை செய்ததாகவும், அவரது உடல், தமிழக - கேரளா எல்லையான நடுப்புணி அருகே பி.நாகூரில் உள்ள தனியார் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, இளைஞரின் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தோட்டத்தில், தாசில்தார் முன்னிலையில் இன்று தோண்டிப்பார்த்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement