கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் கலெக்டர் ஆலோசனை 

கள்ளக்குறிச்சி:கல்வராயன்மலையில் கள்ளச்சாராயம் உள்ளிட்ட வைகளை தடுத்தல் மற்றும் மவைாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

இதில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மலைவாழ் மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்த அரசு துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இதில் எஸ்.பி., ரஜத்சதுர் வேதி, டி.ஆர்.ஓ., ஜீவா, சென்னை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆணைய அலுவலக இணை ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர் செந்தில்குமார், போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு இயக்க வல்லுநர் அருள்ராஜ் ராஜப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement