பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

18

புதுடில்லி: டில்லியில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்தார்.


டில்லியில் பாரத மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியிருந்தார். இதில், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி குறித்து ஸ்டாலின் வலியுறுத்தி பேசினார். இது குறித்தும் சமூக வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


டில்லி பயணத்தின் போது பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4:30 மணியளவில் இந்த சந்திப்பு நடக்கும் என தகவல் வெளியாகி வந்தது.

இந்நிலையில், நிடி ஆயோக் மாநாட்டிற்கு பிறகு பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் சார்ந்த கோரிக்கையை சார்ந்த மனுவை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement