அமைச்சர் குறித்து தகவல் அளித்தால் ரூ.11 ஆயிரம் வெகுமதி : ம.பி.,யில் காங்.,தலைவர் சர்ச்சை போஸ்டரால் பரபரப்பு

இந்துார்: மத்திய பிரேதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவை காணவில்லை. அவர் குறித்து தகவல் அளித்தால், ரூ.11,000 வெகுமதி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் விவேக் கண்டேல்வால் கூறிய சர்ச்சை போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி., அமைச்சரவையில் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருப்பவர் விஜய் ஷா. இவர், சில தினங்களுக்கு முன் கர்னல் சோபியா குரேஷி குறித்து, அவதுாறான கருத்துக்கள் தெரிவித்தார். அவர் மீது சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, விசாரணை நடக்கிறது. அதனை தொடர்ந்து விஜய் ஷா, அமைச்சரவை கூட்டம் உட்பட முக்கிய அரசு கூட்டங்களை தவிர்த்து வருகிறார்.
இந்த நிலையில், ம.பி., மாநிலத்தின் இந்தூர் பிரிவின் மாவட்ட காங்கிரஸ் சேவா தளத்தின் செயல் தலைவர் விவேக் கண்டேல்வால் சார்பில் இந்தூர் நகரில் முக்கிய சந்திப்புகளில் ஒட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய போஸ்டர் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அதில், காணாமல் போன அமைச்சரைத் தேட வேண்டும் என்றும், அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.11 ஆயிரம்வெகுமதி அளிப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
தோனி முடிவு என்ன... * சென்னைக்கு கடைசி போட்டி
-
பிரீமியர் லீக் கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணி வெற்றி
-
இந்தியாவுக்கு 2 வெண்கலம் * உலக துப்பாக்கிசுடுதலில்...
-
இந்திய ஜோடி இரண்டாவது இடம்
-
பெங்களூரு கேப்டனுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்
-
இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன்: சுதர்சன், அர்ஷ்தீப் சிங் அறிமுக வாய்ப்பு