தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பதிவு

சென்னை: '' தமிழகத்தில் இயல்பை விட அதிக மழை பதிவாகி உள்ளது,'' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் அமுதா நிருபர்களிடம் கூறியதாவது: வங்கக் கடலில் வரும் 27 ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏழு இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி மற்றும் பந்தலூரில் தலா 11 செ.மீ., சின்னக்கல்லாறில் 9 செ.மீ., தேவாலாவில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் 3 செ.மீ.,
மடிப்பாக்கம் மேடவாக்கம் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெய்ய வேண்டிய இயல்பான மழை அளவு 11 செ.மீ.,
பதிவான அளவு 21 செ.மீ.,
இது இயல்பை காட்டிலும் 92 சதவீதம் அதிகம்
சென்னையை பொறுத்தவரை இயல்பான அளவு 44 ம.மீ.,
பெய்த மழை அளவு 92 மி.மீ.,
இது இயல்பை விட 110 சதவீதம் அதிகம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஜே.என்.சாலையில் தேங்கும் மழை நீர் கால்வாய் துார் வாருவதே நிரந்தர தீர்வு
-
பாம்பனில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
-
அபாய நிலையில் மின்கம்பங்கள் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம்
-
சபரிமலையில் பாலிதீனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து கடும் நடவடிக்கை எடுக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு
-
தங்கையிடம் அத்துமீறியவருக்கு 16 வயது அண்ணன் கத்திக்குத்து
-
உணவு பாதுகாப்பு அதிகாரியாக நடித்தவருக்கு 'கும்மாங்குத்து'