ஜமா பந்தியில் குவிந்த மனுக்கள் பரிசீலனை

சூலுார், : சூலுாரில் நடந்த ஜமாபந்தியில், பெறப்பட்ட, 698 மனுக்களை பரிசீலிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சூலுார் தாலுகாவில், கடந்த, 20 ம்தேதி முதல் ஜமா பந்தி நடந்தது. கருமத்தம்பட்டி, சூலுார், செலக்கரச்சல், வாரப்பட்டி உள் வட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பட்டா, ரேஷன் கார்டு கோரி, கோவை தெற்கு கோட்டாட்சியர் ராம்குமாரிடம் மனுக்களை அளித்தனர்.

நான்கு நாட்களில், மொத்தம், 698 மனுக்கள் பெறப்பட்டன. இதில், அதிக பட்சமாக, 120 பேர் பட்டா கேட்டு விண்ணப்பங்களை அளித்திருந்தனர். தாசில்தார் சரண்யா தலைமையில், விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement