குண்டுமல்லி வரத்து அதிகரிப்பு வெளி மாவட்டத்துக்கு ஏற்றுமதி

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியனில், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தினமும் வருமானம் தரக்கூடிய குண்டுமல்லி பூக்கள் பயிரிட்டுள்ளனர்.



விளைந்த பூக்களை பறித்து, வியாபாரிகள் மூலம் நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி ஏலத்திற்கு விட்டு வந்தனர். சில நாட்களாக வெயில் காரணமாக குண்டுமல்லி பூக்கள் வரத்து அதிகரித்திருந்ததால், நாமக்கல் பூ மார்க்கெட்டில் விலையும் கிடுகிடுவென குறைந்து, கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால், கூலி ஆட்களுக்கு கூட பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தடுக்கும் வகையில், இப்பகுதி விவசாயிகள், வியாபாரிகள் மூலம் திருப்பூர், காங்கேயம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் பூ மார்க்கெட்டுகளுக்கு பூக்களை ஆட்டோக்கள் மூலம் அனுப்பி வருகின்றனர். இதனால், வெளியூர் செல்லும் பூக்கள் கிலோ, 250 ரூபாய் முதல், 300 ரூபாய் வரை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement