சிவகாசியில் பட்டாசு சாலையில் வெடி விபத்து: அசம்பாவிதம் தவிர்ப்பு

சிவகாசி: சிவகாசி அருகே அம்மாபட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகே அம்மாபட்டியில் தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான கணேஷ்வரி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. சென்னை உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
வெடி விபத்தின் காரணமாக சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு வெடியின் அதிர்வு ஏற்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்கள் பதட்டம் அடைந்தனர். ஒரு அறை முற்றிலும் தரைமட்டமானது.
தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். கலவை செய்த ரசாயனம் மூலப் பொருட்களை மீதம் வைத்துவிட்டு சென்ற நிலையில் அந்த ரசாயன மூலப்பொருள் நீர்த்து தானாகவே வெடித்துள்ளதே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராத நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும்
-
போர் ஒருபுறம்; கைதிகள் பரிமாற்றம் மறுபுறம்; ரஷ்யா தாக்குதலில் 13 பேர் உக்ரைனில் பலி
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு