வாசகர்களை கொண்டோடுகிறோம்!

இந்திய தேசியத்தில், தமிழ் குரலாய் ஓங்கி ஒலித்து பவள விழா நோக்கி வீறுநடை போடும் உங்கள் தினமலர், செல்லப்பிராணிகளுக்காக, 'செல்லமே' சிறப்பு பக்கத்தை கடந்த 2023, டிச., 23ல் துவக்கி சனி தோறும் வெளியிட்டு வருகிறது. இந்த வாரம், இப்பகுதிக்கு, 75வது வாரம்! இது, வாசகர்களின் ஆரவார வரவேற்பினால் நிகழ்ந்த ஒன்று.
Latest Tamil News
செல்லப்பிராணிகளுக்காக ஒரு சிறப்பு பக்கமா, சாத்தியமா என்ற ஐயப்பாட்டுடன் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் வாசகர்கள் அளித்த பதில்தான், வெற்றிகரமான 75 வார படைப்பு. படங்கள், கட்டுரைகள், கருத்துக்கள், ஆலோசனைகள் என அனைத்துவித பங்களிப்பும் அயராது செய்துவரும் ஒவ்வொருவரையும் கொண்டாடும் விதமாக, இந்த வார பக்கம் வாசகர் பக்கமாக செல்லங்களுடன் வசீகரமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
Latest Tamil News
செல்லப்பிராணி வளர்ப்போர், 'பெட்' விற்பனையாளர்கள், 'பெட்' உபகரணங்கள் மற்றும் உணவுப்பொருள் விற்போர், ப்ரீடர்கள், கால்நடை மருத்துவர்கள், பராமரிப்பு ஆலோசகர்கள் என, அனைத்து தரப்பினரையும் நன்றி பாராட்டுகிறது உங்கள் தினமலர். வாருங்கள் இன்னும் கொண்டாடுவோம் அன்பிற்குரிய நம் செல்லங்களை...

- பொறுப்பாசிரியர்

மனதுக்கு நெருக்கம்



Latest Tamil News
சனிக்கிழமை தோறும் முதலில் வாசிப்பது 'செல்லமே' பக்கத்தைத்தான். எங்கள் வீட்டில் மூன்று பப்பிகளை வளர்க்கிறோம். தெருநாய்களுக்கும் உணவளிக்கிறோம். விலங்குகள் நலன் சார்ந்த எங்களின் உணர்வுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்பக்கம் வெளியிடப்படுவது பாராட்டுக்குரியது.
- கார்த்திகாயினி, காங்கேயம்பாளையம், கோவை.

இவ்வளவு விஷயங்களா



Latest Tamil News
செல்லப்பிராணிகளின் சந்தை தளம் இவ்வளவு விரிவானதா என்பதை இப்பக்கத்தின் வாயிலாகத்தான் தெரிந்து கொண்டோம். பார்க், ரெசார்ட், சுற்றுலா தலங்கள், பொம்மைகள், வித்தியாசமான வெளிநாட்டு இன செல்லப்பிராணிகள் பற்றி படிக்கும் போது, ஆச்சர்யமாக இருக்கிறது.
- முத்தையன்பாபு, மதுரை.

எதிர்மறை இல்லை



Latest Tamil News
எனக்கு 81 வயதாகிறது. பல ஆண்டுகளாக, 'தினமலர்' நாளிதழ் வாசிக்கிறேன். தற்போது என் மனதுக்கு நெருக்கமான பக்கமாக அமைந்தது 'செல்லமே' தான். எந்த எதிர்மறை கருத்துகளும் இல்லாமல், செல்லப்பிராணி பற்றிய பல அரிய தகவல்கள் இதில் வெளியிடுவது பாராட்டுதற்குரியது.



- ராமசந்திரன், பென்னாடம், கடலுார்.

புதிய முயற்சி



Latest Tamil News
செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு மட்டுமே அதன் உணர்வு ரீதியான பிணைப்பு பற்றி தெரியவரும். எங்களின் உணர்வுடன் பேசும் பக்கமாக இது வெளியாகிவருகிறது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லாரிடமும், இப்பக்கத்தை படிக்குமாறு தெரிவித்து வருகிறேன்.



- வெங்கடேஷ், விருகம்பாக்கம், சென்னை.

ரசிகர் வட்டாரம்



Latest Tamil News
'செல்லமே' பக்கத்திற்கு பெரிய ரசிகர் வட்டாரமே இருக்கிறது. எங்கள் அப்பார்ட்மென்ட்டில் வசிப்போர், நண்பர்கள், உறவினர்களுக்கான, 'வாட்ஸ்-அப்' குழுவில், இதில் வரும் மருத்துவ குறிப்புகள், வல்லுநர்களின் தகவல்களை பகிர்வோம். இதில், செல்லப்பிராணி பற்றி பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.
- சரவணன், எலக்ட்ரானிக் சிட்டி, பெங்களூரு.

Advertisement