பசிறுமலை அடிவாரம் தார்ச்சாலை பணி துவக்கம்

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., மூலப்பள்ளிப்பட்டி பஞ்., புதுப்பட்டி டவுன் பஞ்., என, மூன்று ஊர்களின் எல்லையில் பசிறுமலை அமைந்துள்ளது. பசிறுமலையை சுற்றி, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.


பசிறுமலை அடிவாரத்திற்கு வெள்ளக்கல்பட்டியில் இருந்தும், மூலப்பள்ளிப்பட்டியில் இருந்தும் செல்ல சாலை வசதி உள்ளது. இதில், வெள்ளக்கல்பட்டியில் இருந்து வரும் தார்ச்சாலை நன்றாக உள்ளது. ஆனால், மூலப்பள்ளிப்பட்டியில் அரசு பள்ளி முதல், பசிறுமலை அடிவாரம் வரை உள்ள தார்ச்சாலை முழுவதும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது. தினமும், இரண்டு வேளை பூ, பால் கொண்டு செல்லும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனால், இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், முதல்வரின் கிராம மேம்பாட்டு திட்டத்தில் தார்ச்சாலை அமைக்க, 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று முன்தினம் அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

Advertisement