டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா மீது மோதிய லாரி

ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், வாணியம்பாடி - -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், அசாம் மாநிலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, அதிகாலை, 3:00 மணியளவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஊத்தங்கரை ரவுண்டானா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரவுண்டானா சேதமடைந்தது. லாரியில் பயணித்த இரண்டு டிரைவர்களும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.A

Advertisement