சாலை சேதமாகி பெரும் பள்ளம் காவிரியில் நீராட செல்வோர் அச்சம்
மேட்டூர், மேட்டூர் காவிரியாற்றில் நீராட, பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள், படித்துறைக்கு கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அவர்கள் வாகனங்களை, கரையோரம் நிறுத்திச்செல்வர். சில மாதங்களுக்கு முன், படித்துறை அருகே உள்ள தார்ச்சாலை அடிவாரம், மழைநீர் வடிகால் உடைந்து, சாலையின் ஒரு பகுதி சேதமாகி, அந்த இடத்தில் பள்ளமாக காணப்படுகிறது.
இருப்பினும் அந்த வழியே தொடர்ந்து பக்தர்கள், சுற்றுலா பயணியர் செல்லும் வாகனங்களின் அழுத்தத்தால், சாலை மேலும் இடிந்து, வாகனங்கள் ஆற்றில் விழும் அபாயம் நிலவுகிறது. தவிர அந்த இடத்தில் சுற்றுலா பயணியர், பக்தர்கள், அச்சத்துடன் செல்லும் அவலம் தொடர்கிறது.
அதனால் சேதமடைந்த மழைநீர் வடிகாலை கட்டி, இடிந்து விழுந்த சாலையை சீரமைக்க, மேட்டூர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தினர்.
மேலும்
-
கனமழை எதிரொலி; சிறுவாணி, பில்லுார் அணைகளில் நீர் மட்டம் உயர்வு!
-
ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
-
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
-
அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு; மே 28ல் தீர்ப்பு
-
தமிழகத்தில் கொட்டியது கனமழை: அதிக மழைப்பொழிவு எங்கே?