பிரதமர் வீடு கட்டும் திட்ட பணியை மழைக்காலத்திற்குள் முடிக்க உத்தரவு

திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் பிரதாப் நேற்று ஆய்வு செய்தார்.

மோவூர் ஊராட்சி செட்டிதாங்கல் கிராமத்தில், 2.03 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் ஏரியை பார்வையிட்டார்.

பின், திருப்பேர் ஊராட்சியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடத்தின் தரத்தை உறுதி செய்தார்.

சென்றாயன்பாளையம் ஊராட்சி இருளர் பகுதியில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பணிகளையும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 2.28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்றாயன்பாளையம் -- குஞ்சேரிபாளையத்திற்கு அமைக்கப்பட்டுள்ள 3.45 கி.மீ., சாலையையும் ஆய்வு மேற்கொண்டார்.

அம்மம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை சார்பில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நர்சரி நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.

மெய்யூர் ஊராட்சி குருபுரம் கிராமத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் 22 வீடுகள் மற்றும் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் இரு வீடுகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கட்டப்பட்டு வரும் ஆறு வீடுகளின் பணியை ஆய்வு செய்தார்.

அதன்பின், பருவமழைக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement