மகள் மாயம் தந்தை புகார்

நடுவீரப்பட்டு, : மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபுசெல்வம்,50; இவரது மகள் ஆர்த்தி,23; தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து ஆர்த்தியை திடீரென காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பாபு செல்வம் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து ஆர்த்தியை தேடி வருகின்றனர்.

Advertisement