சிறுவர்கள் மோதல்: மூன்று பேர் கைது
பொதட்டூர்பேட்டை, பொதட்டூர்பேட்டை அடுத்த கேசவராஜகுப்பம் கிராமத்தை;r சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
கேசவராஜகுப்பத்தைச் சேர்ந்த சிறுவன் நேற்று, பொதட்டூர்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, நகர எல்லையில் ஆறு பேர் கொண்ட கும்பல் தடுத்து நிறுத்தியது. சிறுவனை தாக்கிய கும்பல், கொலை மிரட்டல் விடுத்தது.
இதில், படுகாயம் அடைந்த சிறுவன், பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொதட்டூர்பேட்டை போலீசார், பொதட்டூர்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சபரி, 19, என்பவர் உட்பட மூன்று பேரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்
Advertisement
Advertisement