போதை அண்ணனை கொன்ற தம்பி  சரண் 

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்காவேரியை சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவரது தம்பி ராம்குமார், 25; டூ - வீலர் மெக்கானிக். இவர்களது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். தாய் விஜயா, இளைய மகள் வீட்டில் திருப்பூரில் வசிக்கிறார்.

அஜித்குமார் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு, வீட்டிலும், தெருவிலும் தகராறு செய்துள்ளார். அஜித்குமாரை பலமுறை, ராம்குமார் கண்டித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த அஜித்குமாருக்கும், ராம்குமாருக்கும் ஏற்பட்ட தகராறில், ராம்குமார், அஜித்குமாரை அடித்து கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டது. பின், வீட்டில் இருந்த ஒயரால் கழுத்தை நெரித்து கொன்றார்.

பின், அஜித்குமார் உடலை வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு விட்டு, ராம்குமார் துாங்கினார். நேற்று போலீசில் சரணடைந்து விபரத்தை கூறியுள்ளார். நடுக்காவேரி போலீசார் ராம்குமாரை கைது செய்தனர்.

Advertisement