'தலைமை நீதிபதியை மையமாக்கி சுப்ரீம் கோர்ட் செயல்படுகிறது'

புதுடில்லி: ''உச்ச நீதிமன்றம், தலைமை நீதிபதியை மையமாக வைத்தே செயல்படுகிறது. அதில் மாற்றம் தேவை,'' என, நீதிபதி ஏ.எஸ்.ஓகா தன் பணி நிறைவு நாளில் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓகா நேற்று பணி ஓய்வு பெற்றார். இதற்காக, வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரிவு உபசார விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
உச்ச நீதிமன்றத்தை விட உயர் நீதிமன்றங்கள் ஜனநாயக ரீதியாக செயல்படுகின்றன. உயர் நீதிமன்றங்கள் கமிட்டிகள் வாயிலாக செயல்படுகின்றன. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மையமாக வைத்தே செயல்படுகிறது.
புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதவி காலத்தில், இதில் நீங்கள் மாற்றத்தை காண்பீர்கள். அவரது ரத்தத்தில் ஜனநாயக மதிப்பீடுகள் ஊறியிருக்கின்றன.
உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் விசாரணை நீதிமன்றங்களை புறக்கணிக்கின்றன. விசாரணை நீதிமன்றங்கள் மற்றும் சாதாரண மனிதர்களை பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.
விசாரணை நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் குவிந்து கிடக்கின்றன.
விசாரணை நீதிமன்றங்கள் துணை நீதிமன்றங்கள் என அழைக்கப்படக் கூடாது. இது, அரசியலமைப்பு மதிப்பீட்டுக்கு எதிரானது.
இந்த நீதிபதி பணியை முழு திருப்தியுடன் செய்து முடித்துள்ளேன். வெற்றிகரமான வழக்கறிஞர் நீதிபதியாக பதவி உயர்வு பெறும்போது பெரிய தியாகம் செய்ததாக கூறுவர். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீதிபதியாக பணியில் சேர்ந்தால் பெரும் பணம் ஈட்ட முடியாமல் போகலாம். ஆனால், அதில் கிடைக்கும் மனநிறைவு, வழக்கறிஞர் பணியில் கிடைக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்