மதுரை ஸ்டேஷனில் சுற்றுச்சூழல் பிரசாரம்

மதுரை: உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு மதுரை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளிடையே 15 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இந்தாண்டுக்கான மையக்கருத்து பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடித்தல் என்பதாகும். விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் குமார் தலைமையில் ஊழியர்கள் துண்டு பிரசுரம் வழங்கினர். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் அதனை தவிர்த்தல், அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து பிரசாரம் செய்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
ஸ்டேஷனின் கிழக்கு - மேற்குப் பகுதிகளை இணைக்கும் பிரதான நடைமேம்பாலச் சுவர்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, குப்பை மேலாண்மை கருத்துகளை வலியுறுத்தும் ஓவியங்களை வரைந்தனர்.
கடைகளில் குடிநீர், குளிர்பானங்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டப்பாக்களில் விற்கப்படுகின்றன. பயன்பாட்டுக்குப் பின் அவற்றை அழிக்கும் வகையில் முதல் பிளாட்பாரத்தில் அமைத்த இயந்திரம் பழுதடைந்துள்ளது. அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர பயணிகள் வலியுறுத்தினர்.
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்