சர்வதேச கராத்தே போட்டி

மதுரை: ஒக்கிநோவா கராத்தே இந்தியா சார்பில் 3வது சர்வதேச கராத்தே போட்டி உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடந்தது. இந்தியா, நேபாளம், மலேசியா, இந்தோனேசியா, இலங்கையைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழக அணியில் மதுரை ஜி தொக்குக்காய் கராத்தே பள்ளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 24 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்சிப் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர்.

பெண்கள் சப்ஜூனியர் 11 வயது கட்டா பிரிவில் நந்தித்தா தங்கம், 30 கிலோ சண்டை பிரிவில் வெள்ளி, 12 வயது கட்டா பிரிவில் யாழினி வெண்கலம், 35 கிலோ சண்டை பிரிவில் தங்கம் வென்றனர். 13 வயது கட்டா பிரிவு, 40 கிலோ சண்டை பிரிவுகளில் ஜீவிதா தங்கம் வென்றார்.

14 வயது கேடட் கட்டா பிரிவில் சாதனாஸ்ரீ வெள்ளி, 47 கிலோ சண்டை பிரிவில் தங்கம் வென்றார். 16 வயது ஜூனியர் கட்டா பிரிவில் ஜெய்தா தங்கம், 54 கிலோ சண்டை பிரிவில் வெள்ளி வென்றார்.

ஆண்கள் சப்ஜூனியர் 11 வயது கட்டா பிரிவில் ஜெகன் வெண்கலம், 45 கிலோ சண்டை பிரிவில் வெண்கலம், 12 வயது கட்டா பிரிவில் தக் ஷின் தங்கம்,50 கிலோ சண்டை பிரிவில் தங்கம், ஹரிஷ்குமார் கட்டா பிரிவில் வெள்ளி, 50 கிலோ சண்டை பிரிவில் தங்கம் வென்றனர். 13 வயது கட்டா பிரிவில் கவின்கண்ணா தங்கம், 40 கிலோ சண்டை பிரிவில் வெள்ளி, 14 வயது கேடட் கட்டா பிரிவில் ஆதில் தங்கம், 52 கிலோ சண்டை பிரிவில் வெண்கலம், ராம் யுகேஷ் கட்டா பிரிவில் தங்கம், 57 கிலோ சண்டை பிரிவில் தங்கம் வென்றனர்.

ஜூனியர் 16 வயது கட்டா பிரிவில் விக்னேஸ்வரன் வெள்ளி, 61 கிலோ சண்டை பிரிவில் தங்கம் வென்றார்.

தமிழக அணி பயிற்சியாளர் கோவை சிவசண்முகம், போட்டி நடுவர் மதுரை கவுரிசங்கர் பங்கேற்றனர். கராத்தே பள்ளித்தலைவர் தியாகராஜன், பொதுச்செயலாளர் முத்துராஜூ பாராட்டினர்.

Advertisement