குன்றத்து கோயிலில் ரூ. 54 லட்சம் உண்டியல் வருமானம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் பணம் நேற்று கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், மீனாட்சி அம்மன் கோயில் உதவி கமிஷனர் லோகநாதன், ஆய்வாளர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

ரூ. 54,11,645 ரொக்கம், தங்கம் 162 கிராம், வெள்ளி 2765 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement